Friday, October 23, 2009

சுதர்ஷன் பிறந்த கதை

என்னுடைய பிறந்த கதையை சொல்ல நான் ஒன்னும் மஹாத்மா காந்தி கிடையாது. ஆனா எனக்கு மஹாத்மா மாதிரி என்னுடைய படம் ரூபா நோட்டிலே வரனும்னு ஆசை / கனவு. (அப்துல் கலாம் கூற்றுப் படி என் கனவு பலிக்குமா?)
sorryங்க track மாறிட்டேன். நான் பிறந்த போது எனக்கு பெயர் வைப்பதிலே குழப்பம் வந்ததாம். என் சித்தி, பெயர் வைப்பதில் கில்லியாம், எனக்கு சுஜய்விமர்த்தன் பெயர் வைக்கலாம்னு சொன்னாங்க, ஆனா எங்க தாத்தா பெருமாளோ எனக்கு சுதர்ஸன் – னு பெயர் வைக்கனும்னு ஆசைப்பட்டாங்க.
இதில் இழுபறி வந்தப்ப எங்க தாத்தா சொன்னாங்கலாம், சுஜய்விமர்த்தன் – ங்கற பெயரை எங்க அம்மா ( அதாவது என்னுடைய கொள்ளாத்தா ) easyயா சொல்லிட்டா உன் பையனுக்கு அந்தப்பேரையே வெச்சுடலாம் இல்லைனா சுதர்ஸன்-னு வெச்சுடலாம்னு. பாவிமக்கா இந்த விஷயத்துல கொள்ளோட பல்லு லொள்ளு பன்ன ( பின்னே பொக்க வாயை என்னனு சொல்ல) எனக்கு சுதர்ஸன் – னு பெயர் வெச்சுட்டாங்க.
ஒரு நாள் பெருமாள் கோவிலில் என் பெயருக்கு அர்ச்சனை செய்யும் போது ஐயர் சொன்னார் சுதர்ஸன் – னு பெயர் வெச்சா பையன் குறும்பு ஜாஸ்தியா பன்னுவானேனு. இதக்கேட்டதுக்கப்புறம் சும்மா இருந்தா நான் ஒரு குரங்கே இல்லை ( எங்க வீட்டுல பல சமயம் இப்படித்தான் கூப்பிடுவாங்க) சாரி மனுசனே இல்லை.
எங்க அப்பா அம்மா மற்றும் எங்க குடும்பத்தார் கண்னுல விரலை விட்டு ஆட்ட உக்காந்துகிட்டு, குப்புறப் படுத்துகிட்டு, மால்லாந்து படுத்துகிட்டு யோசிச்சு வெச்ச ஆப்புல அடடடா மண்னக் கவ்வுறாங்க போங்க ( இதப் பாக்கிறப்ப எனக்கு ஒரே குஷியா இருக்கு), எதுக்கும் ஒரு போன் போட்டு அவுங்ககிட்ட கன்பார்ம் பன்னிக்கங்க அவுங்க புலம்பலை. பின்னே இப்ப செய்யலினா எப்ப செய்யுறது. இது எப்படி இருக்கு வர்ட்டா...

Friday, August 28, 2009

என் முதல் வணக்கம்

வணக்கம்,

என் பெயர் சுதர்ஷன் ஆனா சுதுக்குட்டினு அப்பா கூப்பிடுறது ரொம்பப்பிடிக்கும். எங்க தாத்தாவும் என்னை சுதுக்குட்டி- னுதான் கூப்பிடுவாங்க, அப்பிச்சி என்னை சுதுண்ணா-னும், எங்க அம்மாயி டேய் சுதான்-னும், எங்க அக்கா என்னை சுது-னும், எங்க சித்தி என்னை என்னடி சுதி-னும் தான் கூப்பிடுவாங்க . கதிர் சித்தப்பாதான் blog spot creat பண்ணிக் கொடுத்து blog எழுதச் சொன்னாங்க. ஆனா நான் blog spot bad spot ஆயிடக்கூடாதுனு இவ்வுளவு நாளா எழுதலை. என்னைப் பெத்தப்பா கூட என்னை ஒன்னும் சொல்லலை இந்த சித்தப்பாவாலதான் ( இவர் கூடவா ) என்னுடைய இந்த 7th birthdayல இருந்து (28.08.2009 ) black spot மன்னிக்கவும் blog spot எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ( நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்! ஹீ ஹீ ... ).

எப்பவும் போல் இல்லாம இன்னிக்கு நேரமே எழுந்துட்டேன், ஏன்னா என்னை wish பண்ண நிறைய phone call வருமே !. எப்பவும் போல எங்க தாத்தாவும், ஆத்தாவும் wish பண்ண மறந்துட்டாங்க, வழக்கம் போல நானே phone பண்ணி வாழ்த்துக்களை வாங்கிக்கிட்டேன். என்னை wish பண்ணினவுங்க – நிம்மி அத்தை, அப்பிச்சி, அம்மாயி, சித்தி, சித்தப்பா, என் தம்பி குரு, சம்பு மாமா, விஜி அத்தை, வைஷு, லக்க்ஷனா, கதிர் சித்தப்பா, நதிக்குட்டி, பக்கத்து வீட்டு ஆஷா ஆன்ட்டி, மற்றும் ( மாயி அண்ணன், மொக்கைச்சாமி தவிர ) எங்க உறவினர்கள். ஸ்கூல்ல இருந்து வந்து cake வெட்டி, gift receive பண்ணி, நன்றி சொல்லி, கோயிலுக்குப்போயி, ஹோட்டலுக்குப் போயி, சாப்டு, வீட்டுக்கு வந்து ட்ரஸ் மாத்தி, பெட்டுக்கு வந்துட்டேன் ஹாவ் ! ஹாவ் ! ( அட கொட்டாவிங்க ) தூக்கம் தூக்கமா வருதுங்க! குட் நைட்ங்க! மறுபடியும் சந்திப்போங்க! வணக்கங்க!.